internet

img

பணியாளர்களுக்கென புதிய செயலியை அறிமுகம் செய்யும் பேஸ்புக்

பணியாளர்களுக்கென பேஸ் ரெகக்னிஷன் (Face Recognition) தொழில்நுட்பத்தை கொண்டு ஒரு புதிய செயலியை உருவாக்கும் பணியில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

பணியாளர்கள் தமது சக பணியாளர்களையும், நண்பர்களையும் அடையாளம் கண்டுகொள்வதற்காக பேஸ்புக் நிறுவனம் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளது. பேஸ் ரெகக்னிஷன் தொழில்நுட்பத்தைக் கொண்ட செயலி ஒன்றை அந்நிறுவனம் வடிவமைத்து வருகின்றது. ஸ்மார்ட்ஃபோனில் இந்த செயலி நிறுவப்பட்ட பின்னர், போன் கேமராவின் முன் பாணியாளர்கள் அல்லது நபர்களின் முகத்தை காட்டினால், இந்த செயலி சரியாக அடையாளம் கண்டுகொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த செயலியை பேஸ்புக் பணியாளர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.